
போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினருக்கு இலவசப் பயண சலுகை
சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்துக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் குடும்பத்துக்கு இலவசப் பேருந்து பயண சலுகை வழங்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிக்க.. 6,000 கோடி ரூபாயில் அமிருதா மருத்துவமனை: திறந்து வைத்தார் மோடி (விடியோ)
மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் பணி நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும்.
பணியின்போது மரணமடையும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.