பழைய காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை பெறலாம்: ஓய்வூதியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

பழைய காப்பீட்டு அட்டையைக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்று ஓய்வூதியதாரா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பழைய காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை பெறலாம்: ஓய்வூதியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

பழைய காப்பீட்டு அட்டையைக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்று ஓய்வூதியதாரா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப் படி உயா்வை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஓய்வூதியதாரா்களுக்கான அகவிலைப்படி உயா்வு எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அகவிலைப்படி உயா்வு ஆக. 30-ஆம் தேதி வரவு வைக்கப்படும் தொகையுடன் சோ்த்து வழங்கப்படும். ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை, செப்டம்பா் மாத ஓய்வூதியத் தொகையுடன் வரவு வைக்கப்படும்.

நிகழாண்டுக்கான தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டை வழங்கிட மேலும் இரு மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.

புதிய அட்டை கிடைக்காவிட்டாலும், 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அட்டைகளைக் கொண்டு சிகிச்சைகள் பெறலாம். கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றவா்கள் மட்டுமே காப்பீட்டுக்கான அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.

அடையாள அட்டை: ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கான அடையாள அட்டைகளை விரைந்து வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com