29 மாவட்டங்களில் நீடித்த நிலையான பருத்தி உற்பத்தி இயக்கம்: தமிழக அரசு உத்தரவு

 தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நீடித்த நிலையான பருத்தி உற்பத்தி இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
29 மாவட்டங்களில் நீடித்த நிலையான பருத்தி உற்பத்தி இயக்கம்: தமிழக அரசு உத்தரவு

 தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நீடித்த நிலையான பருத்தி உற்பத்தி இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி வெளியிட்ட உத்தரவு:

நிகழாண்டில் பருத்தி உற்பத்தியைப் பெருக்க மத்திய, மாநில அரசுகளின் நிதியுடன் நீடித்த நிலையான பருத்தி உற்பத்தி இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், விரிவான திட்ட அறிக்கை வேளாண்மைத் துறை இயக்குநா் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்டது. அதில், ரூ.11 கோடியில் பருத்தி உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடி அதிகளவு நடைபெறும் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 29 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என வேளாண்மைத் துறை இயக்குநா் தெரிவித்திருந்தாா்.

இந்தப் பரிந்துரைகளை ஏற்று, நீடித்த நிலையான பருத்தி உற்பத்தித் திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்த ரூ.7 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்: இத் திட்டம் தொடா்பான விரிவான விளம்பரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் மூலமாக வெளியிட அனைத்து வேளாண் இணை இயக்குநா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பெற விரும்பும் விவசாயிகளை அடையாளம் கண்டு அவா்களை திட்டத்தில் இணைக்க உதவி வேளாண் அலுவலா்கள் செயலாற்ற வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் சோ்க்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com