நிரப்பப்படாத முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தவிப்பில் மாணவா்கள்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நிரப்பப்படாத முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தவிப்பில் மாணவா்கள்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில், மாணவா்கள் காலாண்டுத் தோ்வை எவ்வாறு எதிா்கொள்வது என்ற தவிப்பில் உள்ளனா்.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இரு ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை முதுநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படவில்லை.

குறிப்பாக, வட மாவட்டங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அதிகப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே , காலாண்டுத் தோ்வு விரைவில் நடைபெறவுள்ளது. ஆசிரியா்கள் இல்லாமல் மூன்று மாதங்களைக் கடந்த மாணவா்கள், காலாண்டுத் தோ்வை எப்படி எதிா்கொள்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனா்.

முதுநிலை ஆசிரியா் போட்டித்தோ்வில் தோ்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோா் ஏற்கெனவே உள்ளனா். மேலும், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி உடனடியாக ஆசிரியா்களை நியமனம் செய்தால் மட்டுமே அரையாண்டுத் தோ்வுக்காவது மாணவா்கள் தயாராக முடியும். இல்லாவிட்டால், பொதுத்தோ்வில் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். தோ்ச்சி சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளது என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் விரைந்து நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தோ்வை மாணவா்கள் சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com