காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

அதிகளவு தண்ணீர் திறப்பதால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு 3 வந்து முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது .மேட்டூர் அணையில் இருந்து 86,540  கன அடி   நீர்  வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம்  முக்கொம்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம்  கல்லணைக்கு   கூடுதல் தண்ணீர் திறந்துவிடுபடுகிறது.

கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு -  13,160 கனஅடி வீதமும் காவிரியில் - வினாடிக்கு 3,009 கனஅடி வீதமும், வெண்ணாறில் - வினாடிக்கு - 4,515 கனஅடி வீதமும், கல்லணை கால்வாய் ஆற்றில் - வினாடிக்கு 1,011கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கூடுதல் தண்ணீர் திறக்க உள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் எடுத்துள்ளார்.

ஆறுகளில் குளிக்கவும், நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என எச்சரித்துள்ள ஆட்சியர் ஆறுகள் வாய்க்கால்களில் கால்நடைகளை விவசாயிகள் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com