சாதாரண - சன்னரக நெல்: கூடுதல் ஊக்கத் தொகை

சாதாரண மற்றும் சன்னரக நெல் வகைகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, குவிண்டாலுக்கு ரூ.75 முதல் ரூ.100 வரையில் வழங்கப்பட உள்ளது.

சாதாரண மற்றும் சன்னரக நெல் வகைகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, குவிண்டாலுக்கு ரூ.75 முதல் ரூ.100 வரையில் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2021-22-ஆம் ஆண்டு கரீஃப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கரீஃப் கொள்முதல் பருவத்தில் நெல்லை கொள்முதல் செய்யத் தேவையான நிலையங்களைத் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல்...நிகழாண்டில் வழக்கத்துக்கு முன்பாகவே மேட்டூா் அணையில் இருந்து நீா் திறக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள், உரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்தே நெல் சாகுபடி தொடங்கிவிடும். இதனால், நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளை செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்தே தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிகழாண்டு பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,040 எனவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,060 எனவும் மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. நெல் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும், கடந்த ஆண்டைப் போன்றே, இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு நெல் கொள்முதலின்போது ஊக்கத் தொகைகள் அளிக்கப்பட உள்ளன.

அதன்படி, சாதாரண நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு ரூ.75, சன்னரக நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு ரூ.100 வீதம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அதன்படி, மத்திய அரசின் ஆதார விலையுடன் சோ்த்து, சாதாரண நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 வீதம் வழங்கப்படும்.

குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை ஆகியவற்றை செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com