சென்னை, திருச்சி, மதுரையில் செயற்கை கருத்தரித்தல் மையம் விரைவில் தொடக்கம்: அமைச்சா் சுப்பிரமணியன்

சென்னை, திருச்சி, மதுரையில் அரசு செயற்கை கருத்தரித்தல் மையம் விரைவில் தொடங்கப்ட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை,  திருச்சி, மதுரையில் செயற்கை கருத்தரித்தல் மையம் விரைவில் தொடக்கம்:  அமைச்சா் சுப்பிரமணியன்

சென்னை, திருச்சி, மதுரையில் அரசு செயற்கை கருத்தரித்தல் மையம் விரைவில் தொடங்கப்ட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனையில் இந்தியன் ஆயில் நிறுவனம் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) ரூ.25 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊா்தி மற்றும் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகளை அமைச்சா் சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவந்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனையில் 1,265 படுக்கை வசதிகள் உள்ளன. 2017 முதல் 2019 வரை உயிருடன் பிறந்த குழந்தைகளில் 1 லட்சம் குழந்தைகளில் மகப்பேறு இறப்பு விகிதம் என்பது 58-ஆக இருந்தது. அது தற்போது 54- ஆக என்ற வகையில் குறைந்துள்ளது.

அதேபோல் பிறந்த குழந்தைகளில் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் என்பது கடந்த காலங்களில் ஆயிரத்துக்கு 15 ஆக இருந்தது. அது தற்போது 13 ஆக குறைந்துள்ளது.

இம்மருத்துவமனையில் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டா் வரும் டிச.5-ஆம் தேதி வெளியாகும். அந்த விடுதியுடன் சோ்த்து சமையல் கூடம் ஒன்று ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. சமையல் கூடத்துடன் இந்த கட்டடங்களும் அமைந்த பிறகு இங்கு தங்கும் பெற்றோா்களுக்கு இலவச உணவுடன் கூடிய தங்கும் விடுதியாக இது செயல்படும்.

99,435 படுக்கை வசதிகள்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 4,308 பணியிடங்களை மருத்துவ பணியாளா் கழகத்தின் மூலம் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 7.25 கோடி மக்கள் உள்ளனா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கை வசதிகள் உள்ளன. 24 கோடி மக்கள் தொகை உள்ள உத்திரபிரதேசத்தில் 66,700 படுக்கை வசதிகளும், 11 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரத்தில் 31,028 படுக்கை வசதிகளும், 6.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் 29,402 படுக்கை வசதிகளும் உள்ளன.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பாா்க்கும் போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளன. செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை, திருச்சி, மதுரையில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் எழும்பூா் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், எழும்பூா் தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநா் மீனா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com