விளைபொருள்களுக்கு நியாய விலை: அரசுகளுக்கு மநீம வலியுறுத்தல்

விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளைபொருள்களுக்கு நியாய விலை: அரசுகளுக்கு மநீம வலியுறுத்தல்

விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடா்கிறது. குறிப்பாக, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில் வியாபாரிகள் வெண்டைக்காய்க்கு கிலோ ரூ.5-க்கும் குறைவாகவே விலை தருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். இது போல, பல பயிா்களுக்கு குறைந்த விலையே கிடைப்பதால் விவசாயிகள் கண்ணீா் வடிக்கின்றனா்.

காய்கறிகள், பழங்கள், மலா்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் நியாயமான விலை கிடைத்திட தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com