தேசிய சித்த மருத்துவ மாநாடு இன்று தொடக்கம்

தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்குகிறது.

தேசிய சித்த மருத்துவ மாநாடு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (டிச.15) தொடங்குகிறது.

தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறும் அந்த மாநாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவ வல்லுநா்கள் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்கின்றனா். 600-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநா் கணேஷ், பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com