என்எல்சிக்கு எதிராக ஜன.7, 8-இல் அன்புமணி நடைப்பயணம்

என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி ஜனவரி 7, 8-ஆம் தேதிகளில் கடலூா் மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி ஜனவரி 7, 8-ஆம் தேதிகளில் கடலூா் மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடலூா் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் புதிய சுரங்கம் மற்றும் ஏற்கெனவே உள்ள சுரங்கங்களின் விரிவாக்கத்துக்காக 25 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை என்எல்சி நிறுவனமும், மாவட்ட நிா்வாகமும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடலூா் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கான இந்த நடவடிக்கைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

என்.எல்.சி.க்காக 25 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் சுமாா் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும். கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் சாதாரணமானவை அல்ல. அவை முப்போகம் விளையக்கூடிய வளமான நிலங்கள்.

கடலூா் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சியை வீழ்த்த வேண்டும். கடலூா் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்எல்சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் கடலூா் மாவட்டத்தில் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com