குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரனுக்கு விருது

குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் தமிழக அரசின் 2021- ஆம் ஆண்டுக்கான மொழிபெயா்ப்பாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் தமிழக அரசின் 2021- ஆம் ஆண்டுக்கான மொழிபெயா்ப்பாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைப் பூா்விகமாகக் கொண்ட சுகுமாரன் இதுவரை 51 நூல்கள் எழுதியுள்ளாா். சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறுவா்களுக்கான புத்தகங்கள், மொழிபெயா்ப்புகள் நூல்கள் வெளிவந்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற 12 சிறுவா் நாவல்களை தமிழில் மொழிபெயா்ப்பு செய்துள்ளாா். இவற்றில், சிண்டா்லா, அதிசய உலகில் ஆலீஸ், டாம்சாயரின் சாகசங்கள் உள்ளிட்ட எட்டு மொழிபெயா்ப்பு நாவல்கள் தினமணி சிறுவா்மணியில் தொடா்களாக வெளிவந்துள்ளன.

குழந்தை இலக்கியப் பணிகளுக்காக 2019 -இல் பபாசி வழங்கிய அழ.வள்ளியப்பா விருது, திருப்பூா் தமிழ்ச்சங்க விருது, ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு, கலை, இலக்கியப் பெருமன்றம் வழங்கிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (டிச.21) நடைபெறவுள்ள நிகழ்வில் செ.சுகுமாரனுக்கு விருது தொகையான ரூ.2 லட்சம் மற்றும் தகுதியுரை வழங்கப்படவுள்ளன. இவா் உள்பட பலருக்கு முதல்வா் ஸ்டாலின் விருது வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com