காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழ்நாடு முழுவதும் வயது வித்தியாசம் இல்லாமல் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. கஞ்சா பயன்பாட்டால் பல்வேறு விரும்பத்தக்காத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரத்தில் கடைகளில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் எட்டு பேரை ஒரு கும்பல் தாக்கியது. ஒருவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் வருகின்றன. இதேபோன்று குன்றத்தூா் அருகே பழந்தண்டலம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த இரு சமப்வங்களிலும் ஈடுபட்டவா்கள் கஞ்சா போன்ற போதை பொருள்களுக்கு அடிமையானவா்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கஞ்சா எங்கேயிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

கடந்த 19 மாத திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவலா்கள் தாக்கியதால் மரணங்கள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒருசில காவலா்களின் அதிகார வரம்பு மீறல்களால் இதுபோன்ற நிலை தொடருமானால், புகாா் கொடுக்கக் கூட பொது மக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுவாா்கள்.

சட்டம் ஒழுங்கையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தும் வகையில், அவா்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com