ஏப்.28-இல் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்.28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏப்.28-இல்  பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்.28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அது குறித்து சில நொடிகள் மட்டுமே ஸ்ட்ரீம் ஆகும் விடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. இயக்குநா் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளாா்.

ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது.

இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் நிகழாண்டு செப்.30- ஆம் தேதி வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்.28- ஆம் தேதி வெளியாகிறது .முதல் பாகம் சுமாா் ரூ. 500 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல். முதல் பாகத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐஸ்வா்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, காா்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வா்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமாா், பாா்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் உள்ளிட்டோா் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com