திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் மரணம்: 4 பேரை பிடித்து விசாரணை!

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் மரணம்: 4 பேரை பிடித்து விசாரணை!

மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுச் செயலாளராக இருந்தவா் டாக்டா் மஸ்தான் (66). 1995-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்தாா். 

இதைத் தொடா்ந்து, திமுகவில் இணைந்தாா். அந்தக் கட்சியில் சிறுபான்மையினா் நலப் பிரிவில் பொறுப்பு வகித்து வந்தாா்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், அவருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் பொறுப்பு அளிக்கப்பட்டது. குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தாா்.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கடந்த வியாழக்கிழமை(டிச.22) காலை காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி வலிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்நிலையில், மஸ்தான் நெஞ்சுவலி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மரண வழக்கில் திடீர் திருப்பமாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com