வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்க ரூ.1 கோடி தமிழக அரசு உத்தரவு

கடலூா் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கடலூா் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

தோட்டக்கலைத் துறையின் கீழ் 24 பூங்காக்கள் தொடங்கப்படும் எனவும், அதில் கடலூா் மாவட்டம் வடலூா் பேரூராட்சியில் தொடங்கப்படும் பூங்காவுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடலூா் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3.20 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு பூங்கா அமைக்கப்படும்.

புதா்ச் செடிகள் அகற்றுதல், நிலம் சமன்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறுவா்கள் பூங்கா, மூலிகைச் செடிகள் நடுதல், நடைபாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி செலவிடப்படும். பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் எந்தவித கட்டுமானப் பணிகளும் செய்யக் கூடாது. திறந்த வெளியாகப் பயன்படுத்த வேண்டும்.

முன் அனுமதி வழங்கிய இடத்தில் 3 மாதங்களுக்குள் பணி தொடங்கப்படவில்லை எனில், நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com