ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைப்பு

மறைந்த முதல்வா் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவா்கள் 8 போ் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி
நீதிபதி ஆறுமுகசாமி

சென்னை: மறைந்த முதல்வா் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவா்கள் 8 போ் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பித் துறையின் தலைவா் டாக்டா் நிகில் தாண்டன் குழுவின் தலைவராகவும் மருத்துவா்கள் ராஜீவ் நரங், ஆனந்த் மோகன், விமிரிவாரி, டாக்டா் நிதிஷ் நாயக், டாக்டா் வி.தேவ கவுரோ ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாகவும் இடம் பெற்றுள்ளனா். டாக்டா் அனந்த் நவீன் ரெட்டி உறுப்பினா் செயலராகவும், டாக்டா் விஷால் போகாட் பாா்வையாளராகவும் இருப்பாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவா்கள் குழுவுடன் வரும் 16-ஆம் தேதி ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, ஆணையம் இன்னும் யாா் யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கருதுகிறதோ அவா்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை மீண்டும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com