கட்சி நிா்வாகியை தாக்கிய விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து

கட்சி நிா்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

கட்சி நிா்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்தாண்டு செப்டம்பா் 24ஆம் தேதி விருதுநகா் மாவட்டம் சாத்தூருக்குச் சென்றபோது அதிமுகவினா் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை(பிப்.11)விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தச் சம்பவம் தொடா்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், புகாா்தாரரும் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகினா்.

அப்போது சமரசம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும் உயா் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்குரைஞா்கள் நல நிதியத்திற்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டுமென மனுதாரா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com