கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் குறைக்கப்படும்: மருத்துவத்துறை செயலர்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கை தேவைக்கேற்ப குறைக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜெ. ராதாகிருஷ்ணன்
ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கை தேவைக்கேற்ப குறைக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிய சூழலில் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையை குறைக்க கல்லூரிகள், கூட்ட அரங்குகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது கரோனா வேகமாக குறைந்து வரும் சூழலில் சிறப்பு சிகிச்சை மையங்களில் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கரோனா மூன்றாம் அலையில் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சிறப்பு சிகிச்சை மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படவுள்ளது.

கரோனா மூன்றாம் அலை குறைந்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவதை நிறுத்திவிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com