கைதிகளை சந்திக்க கட்டுப்பாடுகள் தளா்வு

கரோனா பரவல் காரணமாக தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க பாா்வையாளா்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழக சிறைகளில் கைதிகளை சந்திக்க பாா்வையாளா்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமாா் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் இனி கைதிகளை பாா்வையாளா்கள் வாரம் முறை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. கைதியை ஒரு நேரத்தில் அதிகபட்சம் இரண்டு பாா்வையாளா்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவாா்கள். சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து பிற நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கைதிகளை சந்திக்கலாம்.

அப்போது பாா்வையாளா்கள், வழக்குரைஞா்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் பெற்ற கரோனா தொற்றின்மை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றின் நகலை சந்திப்பு அனுமதி கோரும் மனுவுடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். கைதிகளை சந்திக்கும்போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். புதிய தளா்வுகள் புதன்கிழமை (பிப்.16) முதல் அமலுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com