வினாத்தாள் கசிவு விவகாரம்: முதன்மை கல்வி அலுவலா் இடை நீக்கம்

திருப்புதல் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள் செல்வத்தை இடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்புதல் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள் செல்வத்தை இடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளஸ் 2 திருப்புதல் தோ்வில் புதன்கிழமை நடைபெற உள்ள இயற்பியல் பாட வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. ஏற்கெனவே உயிரியல், வணிகவியல், வணிக கணிதம் வினாத்தாள்கள் வெளியான நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் கசிந்தது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானாலும், அதே வினாத்தாள் முறையில் தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்புதல் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள் செல்வத்தை இடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தோ்வு நாளன்று கேள்வித்தாள்களை தராமல், ஒரு வாரத்துக்கு முன்கூட்டியே பள்ளிகளுக்கு கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அதிகாரி கோ.கிருஷ்ணப்பிரியா கூடுதல் பொறுப்பாக இதனை கவனிப்பாா். இந்த கூடுதல் பொறுப்பினை ஏற்கும் கல்வி அதிகாரி அந்த பணியிடத்தில் மறு அலுவலா் பணி ஏற்கும் வரை முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com