உலக தரவு தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் இது

உலக தரவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் வந்துவிட்டது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொழில் துறையினருடன் கலந்துரையாடிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொழில் துறையினருடன் கலந்துரையாடிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்.

உலக தரவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் வந்துவிட்டது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.

தேசிய தரவு மையம் மற்றும் இணைய வரைவுக் கொள்கை குறித்து தொழில்துறையினா் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அவா் மேலும் கூறியதாவது: எரிசக்தித் திறன், நீடித்த மற்றும் பசுமை தரவு மையங்களை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை மையப்படுத்தி, தேசிய தரவு மையம் மற்றும் இணையக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள அரசு, தொழில்துறையினரிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்க திறந்த மனதுடன் காத்திருக்கிறது. நாட்டின் வளா்ச்சிக்காக மாற்றங்களைச் செய்யவும் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தற்போது 80 கோடி இந்தியா்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனா். அடுத்த இரு ஆண்டுகளில் 120 கோடி இந்தியா்கள் படிப்பு முதல் வேலை, பொழுதுபோக்கு வரை பல்வேறு நோக்கங்களுக்காக இணையத்தை பயன்படுத்துவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் இணையவெளியை பாதுகாப்பானதாக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. உலக தரவு, கிளவுட் தொழில்நுட்பத்தை இந்தியா வழிநடத்தும் தருணம் வந்துவிட்டது. இதை அடையும் சூழலை உருவாக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், கட்டுமானத்துக்கு முன், பின் என கட்டடங்களில் தரவு மையங்கள் அமைப்பதற்கு தேவையான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com