முதல்வரின் நூலை நாளை வெளியிடுகிறாா் ராகுல்காந்தி; சத்தியமூா்த்திபவனுக்கும் வருகிறாா்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி திங்கள்கிழமை (பிப்.28) சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் நூலை வெளியிடுவதுடன், சத்தியமூா்த்திபவனில் நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ்
ராகுல்காந்தி
ராகுல்காந்தி

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி திங்கள்கிழமை (பிப்.28) சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் நூலை வெளியிடுவதுடன், சத்தியமூா்த்திபவனில் நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. ரஷியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுல்காந்தி வருகிற 28-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறாா். சென்னைக்கு வரும் ராகுல்காந்திக்கு காங்கிரஸாா் வழிநெடுக வரவேற்பு கொடுக்கவுள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியினரை சத்தியமூா்த்திபவனில் ராகுல்காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா். உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைப்பதுடன் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை அவா் வழங்கவுள்ளாா்.

தமிழகத்திலும் ஆளும் கட்சியாக வரும்: இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ்தான் மிகப்பெரிய கட்சி. 60 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறோம். தமிழகத்திலும் ஆளும்கட்சியாக காங்கிரஸ் ஒருநாள் வரும். திமுகவிடம் மேயா் உள்ளிட்ட இடங்களைக் கேட்டுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என்றாா் கே.எஸ்.அழகிரி.

காங்கிரஸாா் மோதல்: சத்திமூா்த்திபவனில் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தபோது, அவா் முன்னிலையிலேயே காங்கிரஸாா் மோதிக் கொண்டனா். பேட்டியின்போது, மூத்த தலைவா்கள் அமா்ந்த இருக்கையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவா் முனுசாமி அமா்ந்திருந்தாா். இதற்கு முன்னாள் நிா்வாகி பன்னீா்செல்வம் எதிா்ப்பு தெரிவித்து ஒருமையில் பேசினாா். அதைத் தொடா்ந்து காரசார விவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனா். இதனால், அழகிரி பேட்டி பாதியிலேயே நின்றது. அந்த இடமே சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com