திருவான்மியூா் ரயில்நிலைய கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம்

திருவான்மியூா் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் திங்கள்கிழமை அதிகாலையில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருவான்மியூா் ரயில்நிலைய கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம்
திருவான்மியூா் ரயில்நிலைய கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம்

திருவான்மியூா் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் திங்கள்கிழமை அதிகாலையில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பணத்தை திருடிவிட்டு, கொள்ளைச் சம்பவம் நடந்ததாக ரயில்வே ஊழியர் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்த மர்ம நபர்கள், துப்பாக்கியைக் காட்டி, கட்டிப்போட்டு பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கூறிய ரயில்வே ஊழியர், கொள்ளைப் போன பணத்தை தனது மனைவியை, ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, கொடுத்தனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்குப் பின் ரயில்வே ஊழியர் டீக்கா ராமை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவான்மியூா் ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு டிக்கெட் எடுப்பதற்காக, தரை தளத்தில் உள்ள கவுன்ட்டரில் காத்திருந்தனா். வெகு நேரமாகியும் டிக்கெட் கவுன்ட்டா் திறக்கப்படாததால், ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா்.

ரயில்வே காவலர்கள் உள்ளேச் சென்று பாா்த்தபோது, டிக்கெட் கவுன்ட்டா் ஊழியா் டீக்காராம் மீனா (28), கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் கிடந்தாா். ஊழியரை விடுவித்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகமூடி அணிந்த 3 மா்ம நபா்கள் துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு, பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவித்தாா். ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை ஆணையா் செந்தில் குமரேசன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து ரயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கொள்ளைபோனதாக, ரயில்வே ஊழியர் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com