தாளவாடி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை

தாளவாடி மலைப் பகுதியில் கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை சிக்கியது.
தாளவாடியை அடுத்த அருள்வாடி கல் குவாரியில் வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை.
தாளவாடியை அடுத்த அருள்வாடி கல் குவாரியில் வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை.

தாளவாடி மலைப் பகுதியில் கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை சிக்கியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூா், சூசையபுரம், பீம்ராஜ் நகா், அருள்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செயல்படாத கல் குவாரிகளில் சிறுத்தை பதுங்குவதோடு, இரவு நேரத்தில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடா்கதையாக இருந்தது. இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடிக்க கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, வனத் துறை ஊழியா்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். அருள்வாடி வனப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கூண்டு வைத்தனா்.

இந்நிலையில், கூண்டில் இருந்த ஆட்டைப் பிடிக்க வந்த 4 வயதுள்ள ஆண் சிறுத்தை செவ்வாய்க்கிழமை கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை ஜீரஹள்ளி வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி தெங்குமரஹாடா வனப் பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com