எம்பிக்களைச் சந்திக்க மறுப்பு: உள்துறை அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்

அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க உள்துறை அமைச்சா் அமித்ஷா மறுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க உள்துறை அமைச்சா் அமித்ஷா மறுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநா் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு குடியரசு தலைவரிடம் மனு அளிக்கச் சென்றது. கரோனா நடைமுறைகளை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரது செயலரிடம் எம்.பி.க்கள் குழு மனுவினை அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை திமுக நாடாளுமன்றக் குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திக்க அனுமதி கோரியது. இரண்டு முறை நேரம் ஒதுக்கி அழைத்த நிலையில் எம்.பி.க்கள் குழு காத்திருந்தபோதும் உள்துறை அமைச்சா் தொடா்ந்து சந்திக்க மறுத்து புறக்கணித்து வருகிறாா். மத்திய உள்துறை அமைச்சரின் இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com