இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியதாவது: தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29  குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com