நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி
நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20 வரை நீதிமன்றக் காவல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரம்வீர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரம்வீர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், நேற்று பிற்பகலில் கைது செய்தனர்.

தொடர்ந்து நள்ளிரவு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அவருக்கு உதவியதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், முன்னாள் அமைச்சரின் உறவினர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், நிஷான் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் முன்னால் அமைச்சரிடம் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் காரில் தப்பிச் சென்ற போது யாரெல்லாம் உதவினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார்,  விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா மற்றும் உடல் பரிசோதனை செய்த பின்பு வியாழக்கிழமை காலை சுமார் 7.50 க்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் எண் 2 நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரம்வீர் 15 நாட்கள் அதாவது வருகிற 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்

ஆவின் உட்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னால் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி யை கைது செய்த தனிப்படை போலீசார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை நள்ளிரவு விசாரணை மேற்கொண்டனர்.

ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி பெற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் டிசம்பர் 17 அன்று தலைமறைவானார். அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் மனோகர்,  8 தனிப்படைகளை நியமித்ததார்.

இருப்பினும் கடந்த 20 நாட்களாக அவரது இருப்பிடத்தை கண்டறிவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் வைத்து அவரை புதன்கிழமை மதியம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com