இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கரோனா பரவலால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையான மாணவா்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 850 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாலை நேரங்களில் தன்னாா்வலா்கள் மூலம் மாணவா்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதில் பெரும்பாலானவா்களின் விருப்பத்தின்படி பொங்கல் திருவிழாவுக்கு ஜன.13 முதல் ஜன. 16 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களுடன் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com