முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் அதிகரிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை ரூ.200-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் அதிகரிப்பு: தமிழக அரசு
முகக்கவசம் அணியாதோருக்கான அபராதம் அதிகரிப்பு: தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை ரூ.200-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், முகக் கவசம் அணியும் போது, அது மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை மூடியபடி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பொதுமக்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com