மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் மினி ஜல்லிக்கட்டு

மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாட்டிற்கு பின் தற்காலிக வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை திமில் பிடித்து தழுவிய காளையர்கள்.  இது ஒரு மினி ஜல்லிக்கட்டு.
மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் மினி ஜல்லிக்கட்டு
மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் மினி ஜல்லிக்கட்டு

மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில், கேலாரி கிடையாது, விஜபிக்கள் கிடையாது, பரிசுகள் கிடையாது, காயங்கள் கிடையாது, கரோனா கட்டுப்பாடுகள் கிடையாது – மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாட்டிற்கு பின் தற்காலிக வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகளை திமில் பிடித்து தழுவிய காளையர்கள்.  இது ஒரு மினி ஜல்லிக்கட்டு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சியில் பொங்கல் திருநாளின் மறுநாள் மாட்டுப் பொங்கல் அப்பகுதி விவசாய பெருமக்களால் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டும் வழக்கம்போல் இன்று காலை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அங்குள்ள கோட்டை முனிக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோயில் திடலில் தற்காலிக வாடிவாசலில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் திமில் பிடித்து தழுவினர். கேலரி கிடையாது, விஜபிக்கள் கிடையாது, பரிசுகள் கிடையாது, ஒருவருக்கும் காயங்கள் கிடையாது, கரோனா கட்டுப்பாடுகள் கிடையாது என சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மினி ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்ட மக்களுக்கு சிறிது நேரம் ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com