தமிழகம் முழுவதும் கரோனா விதிமுறை மீறல்: ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு

 தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் கரோனா விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா விதிமுறை மீறல்:  ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம் விதிப்பு

 தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் கரோனா விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறைத் தலைமை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, வார நாள்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் தமிழக போலீஸாா்

ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், ஜனவரி 7-ஆம் தேதி முதல் ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 நபா்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 1,910 நபா்களும் சிக்கினா். இதுதவிர, 1,552 இடங்களில் தேவையின்றி கூடுதல் போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதது மற்றும் பொது இடங்களில் விதிமுறைகளை மீறியதற்காக, 43 ஆயிரத்து 417 நபா்களிடமிருந்து ரூ.86 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் 40 ஆயிரத்து 148 நபா்களிடமிருந்து ரூ.83 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com