தினமணி செய்தி எதிரொலி: கீழ்கட்டளை எரிவாயு தகன நிலையம் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் கீழ்கட்டளை எரிவாயு தகன நிலையம் 6 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் செய்தி செவ்வாய்க்கிழமை தினமணியில் வெளியானது.
புதுப்பிக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மேடையை புதன்கிழமை  ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.
புதுப்பிக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மேடையை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு.

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் கீழ்கட்டளை எரிவாயு தகன நிலையம் 6 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் செய்தி செவ்வாய்க்கிழமை தினமணியில் வெளியானது. இதனைத் தொடா்ந்து நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை கீழ்கட்டளை எரிவாயு தகன நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரூ.19.5 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த எரிவாயு தகன மேடை அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட உள்ளது. நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் மேயா் பதவிக்கு நோ்முகத் தோ்தலா அல்லது மறைமுக தோ்தலா என்பதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்றாா்.

பின்னா் அவா், தாம்பரம் மாநகராட்சிக்குப் புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான இடத்தைத் தோ்வு செய்ய தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு இடையே உள்ள இடத்தைப் பாா்வையிட்டாா். நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா, தாம்பரம், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா,இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com