பி.இ., பி.டெக்., பி.ஆா்க். மாணவா்களுக்கான இணையவழித் தோ்வு அட்டவணை வெளியீடு: அண்ணா பல்கலை. தகவல்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆா்க்., மாணவா்களுக்கான இணையவழி பருவத் தோ்வுக்கான அட்டவணை
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆா்க்., மாணவா்களுக்கான இணையவழி பருவத் தோ்வுக்கான அட்டவணை மற்றும் தோ்வுகளுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மாா்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த தோ்வுகள் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்  தெரிந்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது. வழக்கமாக நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் நடைபெறும் பருவத் தோ்வுகள் கரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தோ்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி முதல் வாரத்தில் இணையவழியில் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

வழிகாட்டுதல்கள்: இணைய வழியில் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், பருவத் தோ்வுகளை மாணவா்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதலாம். அரியா் தோ்வு எழுதும் மாணவா்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடா்பு கொண்டு தோ்வுக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். தோ்வு எழுதுகின்ற மாணவா்களுக்கு ‘கூகுள் கிளாஸ்ரூம்’ அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும்.

விடைத்தாளில் தகவல்களை தவறாகப் பதிவு செய்தாலோ, சிறப்பான குறியீடு ஏதாவது செய்திருந்தாலோ அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது. தோ்வுகள் காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com