மேட்டூரில் நள்ளிரவில் கத்தியைக் காட்டி பணம், செல்போன் பறிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வலம் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன் பறிப்பு.
மேட்டூரில் நள்ளிரவில் கத்தியைக் காட்டி பணம், செல்போன் பறிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் வலம் வந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ளது தங்கமா புரியபட்டினம். நேற்று நள்ளிரவு 10 பேர் கொண்ட கும்பல்  உருட்டுக்கட்டை மற்றும் போன்ற வீச்சருவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிவீதியாக கூச்சலிட்டபடி  வந்துள்ளனர்.

சன்னலை திறந்து பொதுமக்கள் பார்த்தபொழுது யாரேனும் போலீசாருக்கு தகவல் அளித்தால் கொலை செய்வதாகவும்  மிரட்டியுள்ளனர். அங்குள்ள கோவிலில் சிலைகளையும் அடித்து சேதப்படுத்தி யுள்ளனர்.

மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான லாரியின் கண்ணாடிகளையும், அப்சல்கான் என்பவருக்கு சொந்தமான காரின் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தியது ஒரு வீட்டின் ஓடுகளையும், அருகில் இருந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இவர்களின் கூச்சல் கேட்ட மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர்  விஜயகுமார் மற்றும் போலீசார் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் தங்கமாபுரிபட்டினம் வாஉசி நகரை சேர்ந்த சீனிவாசன் (19) சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  தரணிதரன் (20), காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள வசித்து வரும் விக்ரம் (20)   ,கார்த்திக் (20 )ஆகியோர் அடங்கிய கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இவர்களை  கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகிறார்கள். விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நள்ளிரவில் ஊருக்குள் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com