எம்பிபிஎஸ் சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
எம்பிபிஎஸ் சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
எம்பிபிஎஸ் சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகள் உள்பட மொத்தம், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதைத் தவிர சுயநிதி கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

அந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை ஓமந்தூராாா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து ஜனவரி 28, 29-இல், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும். பின்னா் வரும் 30-ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு மாணவா் சோ்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com