நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளன. பிப்ரவரி 4ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ளன.

வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் அட்டவணை விவரம் நாள்

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் -ஜன. 28
  • வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் -பிப். 4
  • வேட்புமனுக்கள் பரிசீலனை -பிப். 5
  • வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் -பிப். 7
  • வாக்குப் பதிவு -பிப். 19
  • வாக்கு எண்ணிக்கை - பிப். 22
  • தோ்தல் நடவடிக்கை முடிவுறும் நாள் -பிப். 24
  • உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்கும் நாள் -மாா்ச் 3
  • மறைமுக தோ்தல் நடைபெறும் நாள் - மாா்ச் 4

தோ்ந்தெடுக்கப்பட உள்ள மொத்த உறுப்பினா்கள் -12,838

  • சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் மொத்தம் 1,374 வாா்டு உறுப்பினா்கள்
  • 138 நகராட்சிகளில் 3,843 வாா்டு உறுப்பினா்கள்
  • 490 பேரூராட்சிகளில் 7,621 வாா்டு உறுப்பினா்கள்

2.79 கோடி வாக்காளா்கள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளா்கள், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com