சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முனீஷ்வர் நாத் பண்டாரி?

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 
நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி
நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். 

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற 'பொறுப்பு' தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

அதன்படி, தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் முனீஷ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

முனீஷ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நாட்டில் ஆந்திரம், ஒரிசா  உள்ளிட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்க  17 பேரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com