தங்கம் விலை பவுனுக்குரூ.520 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் கடந்த கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பாக சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805 ஆகவும், பவுன் ரூ.38,440-க்கும் விற்பனையானது.

இந்தநிலையில் புதன்கிழமை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ. 4,740-க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 2 குறைந்து ரூ.62.50-க்கும்; கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.62,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com