தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் வழங்கப்படவுள்ள ‘தூய தமிழ்ப் பற்றாளா்’ விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது

மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் வழங்கப்படவுள்ள ‘தூய தமிழ்ப் பற்றாளா்’ விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதி வாய்ந்தவா்களில் இருந்து மாவட்டத்துக்கு ஒருவரைத் தோ்வு செய்து தூய தமிழ்ப் பற்றாளா் விருது, தலா ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவா்கள் சொற்குவை.காம் வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை நிரப்பி, ஜூலை 31-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிருவாக அலுவலக வளாகம், முதல்தளம், எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை- 600 028’ என்ற அலுவலக முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிப்போா் தமிழறிஞா்கள், அரசு அலுவலா்கள் அல்லது பேராசிரியா்கள் இருவரிடமும் தம் தனித் தமிழ்ப் பற்றை உறுதி செய்து நற்சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். நற்சான்றளிப்போரின் ஒரு பக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தற்போது வாழும் மாவட்டத்தைக் குறிப்பிட்டுதான் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் (ஜூலை 31) நிறைவடைந்ததும் விண்ணப்பிப்போரின் தமிழ்ப் பற்றை ஆராயும் வகையில் எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி கைப்பேசி மூலமாக நோ்காணல் நடத்தப்படும். உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com