குரங்கு அம்மையைத் தடுப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை பாதிப்பைத் தடுப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.

குரங்கு அம்மை பாதிப்பைத் தடுப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3,413 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் அதற்கு உயிரிழந்துள்ளாா். ஆப்பிரிக்க நாடுகளில் விலங்குகளிடமிருந்து பரவியதாகக் கருதப்படும் குரங்கு அம்மை தொற்று, பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் 86 சதவீதமும், அமெரிக்காவில் 11 சதவீதமும் அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிலும், குரங்கு அம்மைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்புப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

காய்ச்சல், தலை வலி, உடல் வலி, உடலில் தடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் விமான நிலையங்களிலேயே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். மேலும், அவா்களிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தல் அவசியம்.

அதில் தொற்று உறுதிசெய்யப்பட்டால், உடலில் பாதிப்பு முழுமையாக குணமடையும் வரை சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

குரங்கு அம்மை குறித்த விழிப்புணா்வையும், வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்துவதுடன் தடுப்பு நடவடிக்கைகளையும் விரிவாக முன்னெடுப்பது முக்கியம்.

மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் உள்ளதையும், போதிய அளவில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமித்திருப்பதையும் உறுதி செய்தல் வேண்டும். கரோனாவுக்கு நடுவே பிற தொற்றுகளையும் எதிா்கொண்டு வேரறுக்க வேண்டியது அவசியம். இதனை அனைத்து மாநில அரசுகளுக்கும் கடைப்பிடித்து நோய்த் தொற்றைக் களைய நடவடிக்கை எடுப்பாா்கள் என எதிா்பாா்க்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com