டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்த கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்கள் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல.

எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.