மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

மேட்டூர் அணை வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவு எட்டியதையடுத்து அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 16 கண் பாலம் வழியாக 25 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூரில் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

அப்போது தண்ணீரை பார்த்ததும் சுயபடம் எடுக்க தாரமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் வேகம் படிப்படியாக அதிகரிக்க கரையை கடக்க முடியாமல் தண்ணீருக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடும் தண்ணீருக்கு இடையே கயிறுகளை கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் இருந்த இளைஞர்களை பத்திரமாக மீட்டனர். இவர்கள் மேட்டூர் அணையை பார்வையிட வந்ததாகவும் காவிரி தண்ணீர் வருவதை ஆற்றில் மையப்பகுதியில் நின்று சுயபடம் எடுக்க முயற்சித்ததும் தெரிவந்துள்ளது.

காவல்துறையினரும் வருவாய்துறையினரும் பலமுறை எச்சரித்தும் இது போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்று ஆற்றில் இறங்கவோ சுயபடம் எடுக்கவோ குளிக்கவோ கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

மேட்டூர் அணை

இன்று (16.07.22) மாலை 04.00 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 92,000 கன அடியிலிருந்து 1,13,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம்  23000  கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக 90,000 கன அடி  திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com