கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தொடக்க விழா, அடல் ஆய்வகம் திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமிரா திறப்பு விழா ஆகிய முப்ப
பள்ளியின் 1987ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் இருவருக்கு  சம்பளமாக முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 
பள்ளியின் 1987ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் இருவருக்கு  சம்பளமாக முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தொடக்க விழா, அடல் ஆய்வகம் திறப்பு விழா, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமிரா திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ தலைவர் கே.எல்.கே.சீனிவாச பெருமாள், பொருளாளர் இரா.அறிவழகன், துணை தலைவர்கள் ச.ரமேஷ், ஏ.மனோகரன், பேரூராட்சி துணை தலைவர் கேசவன், இணை செயலாளர் கு.சண்முகம், துணை செயலாளர் ஜோ.கிளமெண்ட், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் முன்னிலை வகித்தனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இரா.ரமேஷ் வரவேற்றார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர் குமரபூபதி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தரான் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட அடல் ஆய்வகத்தை திறந்து வைத்த டி.ஜெ.கோவிந்தராஜன், இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்ட எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன். 

பின்னர், மகாமலிபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியை டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். இந்த சதுரங்க போட்டியில் கும்மிடிப்பூண்டி குறுவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து 390 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பள்ளியின் 1987ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பள்ளியில் பணிபுரியும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் இருவருக்கு  சம்பளமாக முதற்கட்டமாக ரூ.50ஆயிரத்தை சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜனிடம் வழங்கினார்கள்.

இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், காளிதாஸ், குப்பன், நஸ்ரத் இஸ்மாயில்,மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக நிர்வாகிகள் தேர்வாய் முனிவேல், தேர்வழி பாஸ்கரன், தேர்வழி ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமார், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் , முன்னாள் ஊராட்சி தலைவர் மா.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் மீர் அலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com