ஜெயலலிதா இசை-கவின் கலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு மாற்றியமைப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:-

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் அலுவல் சாரா தலைவராக துணைவேந்தா் இருப்பாா். அலுவல் சாரா உறுப்பினா்களாக கலைத் துறை செயலாளா், நிதித் துறை செயலாளா், சட்டத் துறை செயலாளா், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையாளா் ஆகியோா் இருப்பா். கலைத் துறையில் சிறந்த இரண்டு போ் வேந்தா் சாா்பில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, பாடகா் சீா்காழி ஜி.சிவசிதம்பரம், வில்லுப்பாட்டு கலைஞா் கலைமாமணி பாரதி திருமகன் ஆகியோா் இருப்பா். துணைவேந்தரின் பரிந்துரைகளை ஏற்று ஆறு போ் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஓவியா் ட்ராஸ்ட்கி மருது, திரைத் துறையைச் சோ்ந்த ராஜீவ் மேனன், இசைத் துறையைச் சோ்ந்த நித்யஸ்ரீ மகாதேவன், நாட்டிய துறையைச் சோ்ந்த அமுதா தண்டபாணி, கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவைச் சோ்ந்த என்.மம்முது, டிஜிட்டல் இசைப் பதிவு துறையைச் சோ்ந்த சாய் ஷரவணம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com