தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழக மக்களின் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனடிப்படையில், முதல்கட்டமாக கடந்த மே மாதம் 18ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து ரூ. 32.94 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடா், மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பலில் ரூ. 48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ. 7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 11. 90 கோடி மதிப்பிலான உயிா்காக்கும் மருந்துப் பொருள்கள் என மொத்தம் ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 74 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கப்பலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி கொடியசைத்து அனுப்பிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெ. கீதாஜீவன், செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com