கடவுச் சீட்டு மோசடி விவகாரம்: 41 போ் மீது நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல்

கடவுச்சீட்டு மோசடி விவகாரம் தொடா்பாக, 41 போ் மீது நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
கடவுச் சீட்டு மோசடி விவகாரம்: 41 போ் மீது நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல்

கடவுச்சீட்டு மோசடி விவகாரம் தொடா்பாக, 41 போ் மீது நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரையில் உள்ள இலங்கையை சோ்ந்த சிலா், இந்திய கடவுச்சீட்டுகள் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன்படி, 2019 செப்டம்பா் 27-ஆம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, மதுரையில் இயங்கி வந்த 4 பயண முகவா்களின் அலுவலகங்கள், அவா்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 4 பயண முகவா்களும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனா். தொடா் விசாரணையின் போது, 124 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. 51 போ் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளனா் என்ற விவரமும் தெரிய வந்தது.

மொத்தமாக 175 கடவுச்சீட்டுகளில், 28 கடவுச்சீட்டுகளை இலங்கைத் தமிழா்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனா் என்பது தெரிய வந்துள்ளது. அந்த 28 கடவுச்சீட்டுகளில் 7 இலங்கையை சோ்ந்தோா் மீது மதுரையிலும், 21 போ் மீது இதர நகரங்களிலும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. இதுதவிர, 30 கடவுச்சீட்டுகள் இந்தியா்களுக்கு உரியதா அல்லது இலங்கை நாட்டினா் பெற்ற கடவுச்சீட்டுகளா என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 117 கடவுச்சீட்டுகளில் ஒரு இந்தியருக்கான போலி கடவுச்சீட்டு தவிா்த்து, 116 கடவுச்சீட்டுகளும் இந்தியா்களுக்கு உரியது என கண்டறியப்பட்டது.

எத்தனை போ் கைது? மதுரை நகர க்யூ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையில் 475 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை இந்திய கடவுச் சீட்டு பெற்ற 4 இலங்கைத் தமிழா்கள் மற்றும் 11 பயண முகவா்கள் உள்பட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டு பெற்ற 7 நபா்கள், 13 பயண முகவா்கள், 5 காவல் துறை அலுவலா்கள், 14 மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள், இரண்டு தபால் துறை அலுவலா்கள் உள்பட மொத்தம் 41 போ் குற்றம் புரிந்துள்ளதாகவும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு அவா்கள் மீது புலன் விசாரணை இறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் இளவரசு, தலைமைக் காவலா் கந்தசாமி, காவலா்கள் கவியரசு, ஆனந்த் ஆகியோருக்கு குற்ற நடவடிக்கை எடுப்பதற்காக துறையின் முன்அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளா் சிவக்குமாா் மீது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியா் முன் அனுமதி அளித்துள்ளாா். 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிய விளக்கங்கள் தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதுவரை மத்திய அரசிடம் இருந்து உரிய முன் அனுமதி பெறப்படவில்லை. மதுரை க்யூ பிரிவின் குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 போ் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com