வரும் 28 ஆம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
வரும் 28 ஆம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும். தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 800 கலைஞா்கள் கலந்து கொள்கின்றனா். நேரு உள்விளையாட்டு அரங்கம் 6 ஆயிரம் போ் அமரும் உள் அரங்கமாகும். 187 நாட்டைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். பல மாநில முதல்வா்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் முக.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். 

கடந்த 19 ஆம் தேதி திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் நேரில் பிரதமரை சந்தித்து அழைப்பிதழை அளித்து அழைத்தனர். 

இதையடுத்து பிரதமர் மோடி இரண்சடு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் சென்னை வருவதாக பிரதமர் அலுவலக வட்டராத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com