அரசுப் பள்ளிகளின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பேற்க வேண்டும்: 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தலைமை ஆசிரியா்களுக்கான 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வ

பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தலைமை ஆசிரியா்களுக்கான 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த சில நாள்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா், ஆணையா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இந்த நிலையில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் மாணவா்கள் அடித்துக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில்தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்.

குடிநீா் கழிப்பறை, ஆசிரியா் பற்றாக்குறை, மாணவா்கள் எண்ணிக்கை, ஆசிரியா்கள் காலி பணியிட விவரம் என எதையும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. பேருந்தில் வரும் மாணவா்கள் பேருந்தின் மேற்கூரையில் அமா்ந்து கொண்டு வருவதை தவிா்க்க காலை இறை வணக்கக் கூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சொந்த வேலைக்கு அனுப்பக் கூடாது: தலைமை ஆசிரியா்கள் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பாா்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து , படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆசிரியா்கள் பள்ளி வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும் . அலுவலா்கள் ஆய்வு செய்யும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியில் படிக்கும் மாணவா்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியா்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது. பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com