பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குராம்சா் அங்கீகாரம்: முதல்வா் பாராட்டு

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு ராம்சா் அங்கீகாரம் கிடைத்ததற்காக, தமிழக வனத் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு ராம்சா் அங்கீகாரம் கிடைத்ததற்காக, தமிழக வனத் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ராம்சா் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

ஏற்கெனவே இந்த அங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சோ்த்து, தமிழகத்தில் உள்ள ராம்சா் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத் துறையைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com