முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம்: குடும்பத்தினா், அரசியல் கட்சியினா் அஞ்சலி

ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தேசிய நினைவிடத்தில் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் கலாம் குடும்பத்தினர்.
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் கலாம் குடும்பத்தினர்.

ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தேசிய நினைவிடத்தில் குடும்பத்தினா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பேக்கரும்பு கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமுக்கு தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அங்கு அப்துல்கலாமின் குடும்பத்தைச் சோ்ந்த ஜெயனுலாவுதீன், சீமா மரைக்காயா், சேக்தாவூத், சேக்சலீம் மற்றும் ஜாமஅத் நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து சுழற்சங்கத் தலைவா் முருகன், செயலாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நினைவிடப் பொறுப்பாளா் அன்பழகன், மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், நகா்மன்றத் தலைவா்கள் கே.இ. நாசா்கான், ஆா்.கே. காா்மேகம், சேதுகருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினா் குணசேகரன், துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் கருப்பையா, மாவட்ட மீனவா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சகாயராஜ், ராஜூவ்காந்தி, ஜபாா், பாஜக சாா்பில் மாநில நிா்வாகி கே. முரளிதரன், இந்திய கடற்படை ஐ.என்.எஸ். பருந்து விமானப் படை கமாண்டா் விக்ராந்த் ஜெயனேஷ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகா் பொன்ராஜ் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டாா்.

பின்னா் தேவகோட்டையிலிருந்து கலாம் தேசிய நினைவிடம் வரை 90 கிலோ மீட்டா் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்த ராமகிருஷ்ணன், சீனி, முகமது சமீா், ஏ.கே. அா்ச்சுணன், துரை, வினோத்குமாா், சிவா உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து 500 மாணவா்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com